Tuesday, December 9, 2008

இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா?











இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா?

இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா... சாட்சாத் நம்ம தலைவர்தான்!பின்னே உலக அழகிகள் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா சோப்ரா தொடங்கி நம்ம உள்ளூர் இளம் ஸ்டார் விஜயலட்சுமி வரை தலைவர் புகழ் பாடினால், இவர்கள் என்னதான் செய்வார்கள்...!அரசியல் என்றாலும் அவர்தான் முன்னிலைப்படுத்தப்படுகிறார்... திரையிலோ முடிசூடா முதல்வர் அவர்தான், முப்பது ஆண்டுகளாய்... யார் வாய் திறந்தாலும் சூப்பர் ஸ்டார் புகழைத்தான் பாடுகிறார்கள்!இவர்கள் பேசாமல் அமைதியாக, வந்த வாய்ப்புகளைக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முதல்வராக கோலோச்சிக் கொண்டிருந்தபோது, கருணாநிதி அமைதி காத்தாரே... அப்படி! திரையுலகில் நம் தலைவர் விரும்பும்வரை அவர்தான் முதல்வர்!!மேட்டருக்கு வருவோம்...பாலிவுட்டைப் பொறுத்தவரை, வெற்றிகரமான ஒரே தென்னிந்திய ஹீரோ நம்ம சூப்பர்ஸ்டார் மட்டும்தான். பொதுவாக அங்கெல்லாம் தென்னிந்திய நடிகர்களுக்கு பெரிய மரியாதை கிடையாது.இங்கே பெரிய‌ நடிகன் என்று புகழப்பட்டாலும் அவர்கள் துணை நடிகர் ரேஞ்சுக்குத்தான் நடத்துவார்கள். திறமையிருந்தால் ஜெயிக்கலாம் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் ஆறுதல்கள்.ஆனால் தலைவர் விஷயம் அப்படியல்ல... அவரது வசீகரமும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொள்ளும் மேனரிஸமும் (Charisma and Mass Appeal) எல்லாவற்றுக்கும் மேல் எவரையும் வெல்லும் அவரது இனிய சுபாவமும்... எல்லைகளைக் கடந்தும் அவர் மேல் மக்களைக் காதல் கொள்ள வைத்துள்ளது!இன்றுதான் இந்த நிலை அல்ல... ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு பன்மொழிக் கலைஞனாக, பல மொழி பேசும் மக்களும் நேசிக்கும் நல்ல நடிகராகத் திகழ்கிறார் ரஜினி.முன்பு ஒரு முறை நடிகை ரதி ஸ்டார்டஸ்ட்-டுக்கு அளித்த பேட்டியில், ‘ரஜினி ஒரு நிஜமான கண்ணியவான்... அவருக்கு இணையான நடிகர் இந்த துணைக் கண்டத்தில் யாருமில்லை’ எனக் குறிப்பிட்டிருந்தார்.ரஜினியுடன் நடித்த ஹேமமாலினி மற்றும் ஜெயப்ரதா இருவருமே அவரை பல பேட்டிகளில் மனதாரப் புகழ்ந்துள்ளனர்.சமூத்தில்கூட எந்திரன் நாயகி ஐஸ்வர்யா ராய் ரஜினியின் சிறப்புகளைப் பட்டியலிட்டு வட இந்திய மீடியாவுக்கு அளித்த பேட்டி உலக அளவில் பேசப்பட்டது. அதில், 'உலக அளவில் ரஜினியைப் போன்ற ஒரு நடிகரைப் பார்ப்பது அரிது என்றும், ஒரு நடிகன் என்பதற்கு முழு அர்த்தம் ரஜினிதான்', என்றும் குறிப்பிட்டிருந்தார்.சில வருடங்களுக்கு முன், ரஜினி குறித்து ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அன்றைய பாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் இப்படிச் சொல்லியிருப்பார்:கேள்வி: அத்தனை நட்சத்திரங்களுக்கும் ரஜினி, கமலோடு நடிப்பது ஒரு லட்சியமாக இருக்கிறது. உங்களுக்கு எப்படி..?பதில்: பின்னே… ரஜினியோடு நான் ‘உத்தர்தக்ஷின்’ படம் நடித்திருக்கிறேன். இன்னும் கமலோடு நடிக்கவில்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா… கமல் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால், ஐ லவ் ரஜினி!இது, மாதுரி அன்று...இன்னொரு நடிகை தலைவரைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார், இன்று:கேள்வி: உங்கள் ஆசை என்ன?பதில்: எப்படியாவது ரஜினி சாரோட ஒரு படத்துல நடிக்கணும். அவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. ஆனால் அவர் பேசுவதைக் கேட்கும்போது, அவரைப் பற்றி மக்கள் பேசுவதைக் கேட்கும்போது, என்னையும் மீறி அவர் மேல் தனி மரியாதையும் ஒருவித உரிமை கலந்த பற்றுதலும் வந்துவிட்டது.இந்த அளவு மீடியாவை ஆதிக்கம் செலுத்தும் ஒருவரை நான் வேறு எந்த நாட்டிலும் கேள்விப்பட்டது கூட இல்லை. அவருடன் நடிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தால் சந்தோஷப்படுவேன்... ரோபோ (எந்திரன்) படத்துக்காக என் பெயர் பேசப்பட்டதே பெரிய விஷயம்தான்...”-பாலிவுட்டில் இன்றைக்கு ஐஸ்வர்யா ராய் ரேஞ்சுக்குப் பேசப்படும் நடிகை தீபிகா படுகோன், தைனிக் பாஸ்கர் நாளிதழுக்கு சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில்!

Thursday, December 4, 2008

ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!


ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!


ரிஸ்க் எடுப்பதில் ரஜினிக்கு எப்போதுமே அலாதி ஆர்வம். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரைப் போல உண்மையான ஈடுபாடு கொண்ட கலைஞர்களைப் பார்ப்பது அரிது என்கிறார் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்.சிவாஜியில் ரஜினியின் ஸ்டன்ட் மாஸ்டராகப் பணியாற்றியவர் பீட்டர் ஹெய்ன். வியட்நாமில் ஒரு காராத்தே பயிற்சியாளரின் மகனாய் பிறந்து பின்னர் இந்தியாவில் செட்டிலாகிவிட்டவர் பீட்டர். இவரது தந்தை வழி மூதாதையர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். குங்ஃபு கலையில் நிபுணத்துவம் பெற்றவர்.சமீபத்தில் அவரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த போது ரஜினியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.“அவருடன் நான் பணியாற்றிய ஒரே படம் சிவாஜிதான். ஆனால் என் ஆயுசுக்கும் பெருமை சேர்க்கும் படமாக அந்தப் படம் அமைந்துவிட்டது.இந்தப் படத்தில் பணியாற்றிய போது என் மீது ரஜினி சார் கோபித்துக் கொண்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.அதில் துளியும் உண்மையில்லை.சார் என்னிடம் எப்போதும் சொல்வது, ‘கண்ணா... ஸேப்டி பர்ஸ்ட்!’ அதன்படிதான் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் போதிய பாதுகாப்பு ஏற்படுகளுடன் ஸ்டன்ட் காட்சி அமைக்கப்பட்டது. ரஜினி சாருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக்கு இணையாக மற்ற ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டது. இன்னொன்று, மற்ற ஸ்டன்ட் கலைஞர்கள் போலத்தான் நானும் நடந்து கொண்டேன்.அப்படியும் ஓரிரு அசம்பாவிதங்கள் நடந்துவிட்டன. ரஜினி சாரின் முன்னெச்சரிக்கைக்கு அர்த்தம் புரிந்து, முன்னிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டேன். இப்போதும் அதைக் கடைப் பிடிக்கிறேன். இந்தியில் ஆமிர்கானுடன் கஜினி படம் பண்ணும்போது கூட, சிவாஜியில் ரஜினி சார் சொன்ன அறிவுரைகள்தான் என் மனதுக்குள் ஓடின...இதோ இப்போது நானும் ஒரு இயக்குநராக மாறியிருக்கிறேன். ஒரு சிறந்த பொழுது போக்குப் படம் எப்படி இருக்க வேண்டும்? ரஜினி சார் படம் மாதிரிதான் இருக்க வேண்டும். அதில் எந்த இரண்டாவது கருத்துக்கும் இடமில்லை.சாருடைய படங்களில் எனக்குப் பிடித்த அம்சம்... சண்டைக் காட்சிகளைக் கூட பாலிஷாக வைக்கச் சொல்வார். ரத்தம் கொப்பளிக்க, வன்முறை தாண்டவமாடுவது போன்ற காட்சிகள் அவருக்குப் பிடிக்காது. காரணம் குடும்பப் பெண்களும், குழந்தைகளும் அதை விரும்ப மாட்டார்கள் என்பதால்தான்.சண்டைக் காட்சிகள் தொழில் நுட்பத்துடன், தரமாக இருக்கலாம். ஆனால் அருவருக்கத்தக்கதாக இருக்கக் கூடாது என்ற அவரது எண்ணத்தைத்தான் நான் இயக்கும் படத்திலும் பின்பற்றப்போகிறேன்.காரணம் ரஜினி சார் ஒரு விஷயம் சொன்னால் அதில் அர்த்தங்கள் ஆயிரம் இருக்கும்... பயன்கள் அதற்கு மேலேயே இருக்கும்!

Wednesday, December 3, 2008

தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!


தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில், அவர் படங்களை வைத்துச் சம்பாதிக்கும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் அமைதி காத்தாலும், ராஜ், விஜய் போன்ற தொலைக்காட்சிகள் மட்டும் எப்போதுமே ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடுவது வழக்கம்.இந்த ஆண்டு சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதத்தில் ராஜ் டிவி பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.டிசம்பர் மாதம் முழுக்க தினமும் சூப்பர் ஸ்டாரின் படங்களை ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளது. நான் மகான் அல்ல, தர்ம துரை போன்ற அதிரடிப் படங்கள் இதில் இடம் பெறுகின்றன. தினசரி பிற்பகல் 1.30 மணிக்கு இந்தப் படங்கள் ஒளிபரப்பாகும். அதுமட்டுமல்ல, ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி ரஜினி குறித்து பிரபலங்களின் பேட்டிகள், ரசிகர் மன்றங்களின் ஆக்கப்பூர்வ கொண்டாட்டங்கள் என பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் காயம் பட்டு துன்புறும் வேளையில் தன் பிறந்த நாளைக் கொண்டாடாமல் ஏழை மக்களுக்கு உதவுங்கள் என ரஜினி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து பலவேறு ரசிகர் மன்றங்களும் ரத்த தான முகாம், இலவச நல உதவித் திட்டங்கள், இலங்கை மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் உண்ணாவிரதக் கூட்டம் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

Tuesday, December 2, 2008

ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா


ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா


ஒரே சமயத்தில் டேனியல் கிரேக் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்துடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள்?இப்படியொரு கேள்வி முன்னாள் உலக அழகி ப்ரியங்கா சோப்ராவிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர் அளித்த பதில் இது:நான் நிச்சயம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பைத்தான் தேர்வு செய்வேன்!தமிழில் ஒரே படம்தான் நடித்துள்ளார் ப்ரியங்கா. அந்த படமே, இனி தமிழில் நடிக்க வேண்டாம் எண்ணத்தைக் கொடுத்துவிட்டது அவருக்கு. இதை அவரே ஒருமுறை விமன்ஸ் ஈராவுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடிருந்தார்.இன்றைக்கு ஐஸ்வர்யா ராய்க்கு இணையாக பாலிவுட்டில் கொடி கட்டிப் பறப்பவர் ப்ரியங்கா.இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் நிருபர்களின் கேள்விக்கு அவர் பதில் சொன்னபோது, நமது நண்பர் இந்தக் கேள்வியை வீசினார்.ஒரே நேரத்தில் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் க்ரேக்குடன் நடிக்க வாய்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள்?அடுத்து, ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை ப்ரியங்கா.'நான் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பதையே விரும்புகிறேன். எனக்கு ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரேக் தேவையில்லை', என்றார் பட்டென்று!'அதற்காக டேனியல் கிரேக் நல்ல நடிகர் அல்ல என நினைக்கத் தேவையில்லை. அவரும் நல்ல நடிகர்தான். ஆனால் ரஜினி சார் சம்திங் ஸ்பெஷல்...'என்றார் தொடர்ந்து.ஏற்கெனவே ஒரு உலக அழகி நமது சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்ததிலிருந்து அவர் புகழைப் பாடி வருகிறார் (அதாவது உண்மையை!). இப்போது அவருடன் இன்னொரு உலக அழகியும் இணைந்துள்ளார்!தாய்க்குலத்தின் சாய்ஸ் எப்பவுமே தலைவர்தான்!

Monday, December 1, 2008

ரஜினி தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் - பீட்டர் செல்வகுமார்


ரஜினி தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் - பீட்டர் செல்வகுமார்


அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், பொன்மனச் செல்வன் ஆகிய படங்களைத் தயாரித்த, 'தாயம் ஒண்ணு' படத்தைத் தயாரித்து இயக்கிய பீட்டர் செல்வகுமார் ஆரம்பத்தில் கதாசிரியராக இருந்தவர். 'மூன்று முகம்' படத்தின் கதாசிரியர் அவரே. பீட்டர் செல்வகுமார் ரஜினியைச் சற்று வித்தியாசமாக நமக்கு அறிமுகம் செய்கிறார். ரஜினியை விட நான் வயதில் மூத்தவன் என்றாலும் 'ரஜினி சார்' என்பேன். அதற்கு அவர், "ரஜினி என்று சொல்லுங்கள் போதும். ஏன் 'சார்' போடுகிறீர்கள்?" என்று தன் சங்கடத்தைத் தெரிவித்தார். "சார் போட்டு அழைக்குமளவிற்கு தகுதியுடையவர் நீங்கள்" என்றேன். இப்போதும் நான் அவரை அப்படித்தான் அழைக்கிறேன்.''ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படம் 'பைரவி'. அதில் நான் வசன உதவியாளராக இருந்தேன். வேகமாக வசனம் பேசும் ரஜினிக்கு வசனம் சொல்லிக் கொடுப்பது என் வேலைகளில் ஒன்று. 'Time is Money' என்பதைப் போல் நேரத்தின் மதிப்பை உணர்ந்தவர் ரஜினி. அந்த உணர்வு ரஜினியிடம் இன்றைக்கும் உண்டு. அப்போதே ரஜினியிடம் உயர்வு, தாழ்வு மனப்பான்மையெல்லாம் கிடையாது. தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் அவர். ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவே பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. 'பைரவி'யில் ரஜினிக்கு எதிரான வில்லன் வேடம் அவருக்கு. ரஜினிக்கு அது சங்கடம்தான். தன்னைவிட சீனியரான ஸ்ரீகாந்துக்கு மதிப்பளிக்க வேண்டி, படப்பிடிப்புக்கு வந்து அவர் முதலில் வேண்டிக் கொண்டது. "டைட்டிலில் ஸ்ரீகாந்த் சார் பெயர் முதலில் வரட்டும். என் பெயர் அடுத்து வந்தால் போதும்" என்பதைத்தான். ரஜினியின் இந்த சினிமா தைரியம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் மீது அதிக மதிப்பும், அன்பும் கொள்ளச் செய்தது. 'பைரவி' முதல் கட்ட படப்பிடிப்பு கிளைமாக்ஸில் ஆரம்பமானது. கையில் சவுக்கை எடுத்துக் கொண்டு ரஜினி ஸ்ரீகாந்தை விரட்டுவது மாதிரி காட்சி. அதற்காக கண்ணாடி முன் நின்று சவுக்கை கழுத்தில், இடுப்பில்..... இப்படிப் பலவிதமாக சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் ரஜினி. அதையெல்லாம் பார்த்து 'ரஜினி என்ன இப்படிக் கிறுக்குத்தனமாக செய்கிறார்' என்று நான் யோசித்ததுண்டு. ஆனால் அந்தப் படப்பிடிப்பில் அவர் ரசிக்கும்படியாகச் செய்தபோதுதான் என் தவறை உணர்ந்தேன். முதலாளி ஸ்ரீகாந்திடம் விசுவாசமாக இருக்கிறார் ரஜினி. ஆனால் அதே முதலாளி தன் தங்கையைக் கற்பழித்துக் கொன்றவன் என்று அறியும் போது ஆவேசத்துடன், "நீ சுட்டு விரலைக் காட்டினப்ப நான் வேட்டை நாய் மாதிரி பாய்ஞ்சேன்" என்று சொல்வார். நான் ரஜினியிடம் அந்த வசனங்களைச் சொல்லி, சொடக்கு போட்டுக் காண்பித்த போது, "இப்படிச் செய்தால் சிவாஜி சார் மாதிரி இருக்குமே" என்றார். நான் அதற்கு "உங்களது வசனம் பேசும் வேகத்தில் சிவாஜி சார் சாயல் வராது" என்றேன். அதை ரஜினி ஒத்துக் கொண்டார். படத்தில் ரஜினிக்கு ஒரு கால் இருக்காது. அதற்காக கட்டையைக் கட்டிக் கொள்வார். அப்படிக் காலில் ஒன்றைக் கட்டிக் கொண்டு கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில், காரமடை (கோவை அருகிலுள்ளது) அருகில் பாறைகள் நிறைந்த பகுதியில் சிரமம் பாராமல் நடித்தார். அடுத்து 'தர்மயுத்தம்'. நான் கதை, வசனம் எழுதிய முதல் படம். ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரம் அது. ஆனால் அவரால் படப்பிடிப்பில் எந்தப் பிரச்னையுமில்லை. படத்தில் பௌர்ணமியன்று ரஜினியைக் கட்டிப் போடுவார்கள். அப்போது அவர் அலறுவார். அது போல் ஒரு காட்சி அடையாறு ஆலமரம் பகுதியில் படமாக்கப்பட வேண்டும். எல்லோரும் தயாராக இருந்தபோது ரஜினி வரவில்லை. ரஜினி பிரச்னையில் பாதிக்கப்பட்ட நேரம் அது. படப்பிடிப்பு தொடங்கிய வீடு திருமதி. ரெஜினா வின்சென்ட் என்பவருக்குச் சொந்தமானது. ரஜினி அவர்மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டிருந்தார். அவரைத் தன் தாயாகவே நேசித்தார். ரஜினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணமானபின், முதலில் கலந்து கொண்ட படப்பிடிப்பு 'தர்மயுத்தம்'. அதற்கு முன் 'நமக்கு இது முதல் படம். அவர் குணமாகி வருவாரோ, மாட்டாரோ' என்று நான் மட்டுமின்றி, தயாரிப்பாளர் ஜாக்பாட் சீனிவாசனும் சஞ்சலத்தில் இருந்தார்.ரஜினி படப்பிடிப்புக்கு வந்தபின் எதுவும் நடக்கவில்லை. ஆனால் எல்லோருக்கும் உதறல் இருந்தது. என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று கற்பனையில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ரஜினியிடம் 'ரீ டேக்'கிற்கு கூட தயங்கினார்கள். ஒரு சமயம் டைரக்டர் ஆர்.சி.சக்திக்கு இன்னொரு டேக் தேவைப்பட்டது. அவர் ரஜினியிடம் கேட்கத் தயங்கினார். என்னைத் தூண்டிவிட்டார். நான் ரஜினியிடம் மெதுவாகச் சென்று வேறு விஷயங்களைப் பற்றி பேச்சுக் கொடுத்து கடைசியில் "ஒண்ணுமில்ல. இன்னொரு டேக் எடுத்தா நல்லதுன்னு படுது" என்றேன். "அதனாலென்ன நடிக்கிறேனே" என்றார். ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்த அளவு ரஜினியிடம் உரிமையோடு வேலை வாங்க முடியவில்லை. சண்டைக் காட்சிகளை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று அபிப்ராயப்பட்டோம். இதே எண்ணம் ரஜினிக்கும் இருந்தது. படம் முடிந்தபின், "நான் நல்ல நிலையில் இருந்திருந்தால் இன்னும் சரியாகச் செய்திருப்பேனோ?" என்று வருந்தினார். இந்த வருத்தம் ரஜினிக்கு எப்போதும் உண்டு. ஆனாலும் அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது எல்லோருக்குமே மகிழ்ச்சி. மகேந்திரன் இயக்கிய ஜானியில் ஒரு கதாசிரியர் என்ற முறையில் ஸ்டோரி டிஸ்கஷனில் மட்டுமின்றி, படப்பிடிப்பிலும் கலந்து கொள்வேன். 'ஜானி' படத்திற்காக ஊட்டியில் ரஜினி ஓடிய ஓட்டம் இருக்கிறதே, எத்தனை கிலோ மீட்டர் தூரம் என்று கணக்கு பார்க்காமல் ஓடியிருக்கிறார். அதற்கு ஒலிம்பிக்கில் ஓடியிருந்தாலும் ரஜினி முதல் பரிசு வாங்கியிருப்பார். ஜானி போலீஸ?க்கு பயந்து ஓடிய பின், பார்பர் வித்யாசாகர் (இதுவும் ரஜினி) ஸ்ரீதேவியிடம் வருவார். ஜானியைப் போல் நடித்து கடைசியில் 'நான் வித்யாசாகர்' என்று அறிமுகம் செய்து கொள்வார். அந்தக் காட்சி முடிந்தபின் ஸ்ரீதேவியின் நடிப்பைப் பற்றி சுமார் அரை மணி நேரம் புகழ்ந்து பேசி மகிழ்ந்தார். "என்ன நடிப்பு..... என்ன நடிப்பு...." என்று ஸ்ரீதேவியை அப்படிப் பாராட்டினார் என்றால், படத்திற்காக டப்பிங் பேசுகையில், வித்யாசாகர் வேடத்தைப் பார்த்துவிட்டு, "அட என்னம்மா நடிக்கிறார் பாருங்க' என்று தன் கேரக்டரையே அவர் ரசித்தபோது, அதைப் பார்த்து நான் ரசித்தேன். 'ஜானி' படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது சில தினங்கள் தொடர்ந்து நள்ளிரவு தாண்டியும் படப்பிடிப்பு நடக்கும். மறுநாள் காலையில் 5 மணிக்கு டப்பிங் வைத்துக் கொள்வார். 7 மணிக்கு அல்லது பாலச்சந்தர் எப்போது அழைத்தாலும் 'தில்லு முல்லு' படப்பிடிப்பிற்குச் செல்வார். அங்கு சென்று வந்தபின் மாலையில் மீண்டும் 'ஜானி' படப்பிடிப்பு. இதற்காக ரஜினியைப் புதுப்பேட்டை கார்டனில் இருந்த வீட்டிற்கு நள்ளிரவில் கொண்டு விடுவது, திரும்ப அதிகாலையில் அழைப்பது எல்லாம் வீட்டுக்காரர்களுக்குச் சிரமமாக இருக்குமென்று, தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. ஒரு ஏற்பாடு செய்தார். 'ஜானி' படம் முடியும் வரை பாம்குரோவ் ஓட்டலில் ரஜினிக்கு ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டது. நள்ளிரவு 2 அல்லது 3 மணிக்குத் திரும்பும் ரஜினி உடைகளை, ஷ?வைக் கூடக் கழற்றாமல் அப்படியே காலை விரித்துக் கொண்டு அசந்து தூங்குவார். தன்னை எழுப்ப வசதியாக இருக்க வேண்டுமென்பதற்காக கதவைத் திறந்தே வைத்திருப்பார். நான் 4.45க்கு சென்று நிற்பேன். ஒரு நிமிடம் கூட அதிகமாகாது. நான் எழுப்பாமலே எழுந்து நிற்பார் ரஜினி. அது எப்படி என்று ஆச்சர்யப்படுவேன். எழுந்ததும் அவரது உடைகளைக் கழற்ற நானும் உதவுவேன். "என்ன பீட்டர் சார், உங்களுக்கேன் இந்த வேலை?" என்று சங்கடப்படுவார். "உங்க சகோதரனா இருந்து நான் செய்யக் கூடாதா?" என்று கேட்டதும் நெகிழ்ந்து போவார். "ஒரு பதினைந்து நிமிடம் ஷேவிங், குளியல், கடவுளைத் தியானித்தல், இது முடிந்து 5 மணிக்கெல்லாம் ரெடியாகி விடுவேன்" என்பார். சொன்னது போலவே ஷேவிங், குளியல், ராகவேந்திரரை வணங்கிவிட்டு தயாராக நிற்பார். அப்படி ஒரு அசாத்திய வேகம் மட்டுமின்றி, கடுமையான உழைப்பும் அவருக்கே உரித்தானது."

Thursday, November 27, 2008

Rajini: From Ambassador to Toyota for Endhiran


Rajini: From Ambassador to Toyota for Endhiran
Endhiran’s shooting is currently taking place in Chennai, confirms our sources. It is said that Shankar is filming a few important scenes in the northern parts of Chennai and the locations are kept so secret that the crew are not aware of the shooting spot even a day prior.Interestingly, Rajini is also trying
to mask himself in anonymity and is adopting various new techniques to get away from the fans and bystanders. It is well known in film circles that the Superstar prefers and uses either an Ambassador or Fiat car. In an attempt to conceal his identity, Rajini is off late spotted seen using a Toyota Qualis.

Rajini pera ketaale….!


Rajini pera ketaale….!


Superstar Rajinikanth's biography, authored by Gayathri Srikanth, is ready to be released in Tamil. Gayathri's Tamil version of the book, titled Rajini Pera Ketaale, will be launched on November 30 in an event in Chennai.Representatives of the author mention that the Tamil version will
have many interesting additions as opposed to the English version. The book will be released by Kanimozhi M P and first copy will be presented to entrepreneur Meena Reddy. Soundarya Rajinikanth and director Muthuraman are also expected to take part in the event.

Tuesday, November 25, 2008

நிஜமான அங்கீகாரம்!


உலகத் தமிழர் நெஞ்சங்களில் ரஜினி!


அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற சஸ்பென்ஸ் வைப்பதில் ரஜினிக்கு நிகர் ரஜினிதான். அந்த சஸ்பென்ஸைத் தாங்க முடியாத குழப்பத்தில் நமது மீடியாக்கள் உளரும் உளறல் இருக்கிறதே அது கவுண்டர் காமெடியையும் மிஞ்சுபவை.இலங்கைத் தமிழர் உண்ணாவிரதத்துக்கெல்லாம் ரஜினி எங்கே வரப்போகிறார் என்று கூறி வந்தார்கள். அவரோ வந்ததோடு மட்டுமல்ல... எல்லோரும் வாடி வதங்கிக் கிடந்தபோது, அவர் மட்டும் மாலை உண்ணாவிரதம் முடியும்வரை விசிறி சாமியார் மாதிரி பிரஷ்ஷாகவே உட்கார்ந்திருந்தார். அலங்காரச் சொற்கள் எதையும் பயன்படுத்தாமல், உள்மனம் சொன்னதை மேடையில் முழங்கிவிட்டுப் போக, அது உலகமெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.இன்னும்கூட பல ஈழ ஆதரவு ஊடகங்களில் அவரது பேச்சு பிரதானமாக இடம்பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது. போர்முனையில உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருக்கிற தமிழர்களுக்கு இந்த மாதிரி ஒரு அவதார மனிதரிடமிருந்து கிடைத்துள்ள தார்மீக ஆதரவு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.அந்த பரபரப்பு அடங்கும் முன்பே, தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை (கவனிக்க: பிறந்த நாளை அவர் கொண்டாடுவதில்லை. ரசிகர்களாகத்தான் கொண்டாடுகிறார்கள்) ரத்து செய்யச் சொல்லி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையால் இலங்கை மக்களுக்கு அமைதி கிடைத்திட தூண்டுதலாக இருந்தால் மகிழ்வேன் என்றும் விளக்கம் அளிக்க, அரசியலுக்கு வராமலேயே உலகத் தமிழர்களின் இதயங்களில் சூப்பர் ஸ்டார் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் ‘தலைவராக’!இப்படி ஒரு நல்லவர்தான் நாட்டுக்கு வேண்டும், என்ற பேச்சுக்கள் இப்போது ‘ரஜினி விமர்சகர்கள்’ வாயிலிருந்தே வெளிவரத் துவங்கி இருப்பதுதான் ‘தலைவர்’ ரஜினிக்குக் கிடைத்துள்ள நிஜமான அங்கீகாரம். இதுகுறித்த தொடர்ச்சியான பதிவுகள் நமது வலைதளத்தில் அணிவகுக்கவிருக்கின்றன, விரைவில்!அவரது ஒற்றைச் சொல்லுக்கு இத்தனை மரியாதையும், ஆளுமையும் இருக்கிறதென்றால், அவர் செயலில் இறங்கினால்...-இந்தக் கேள்வியும் அதன் முடிவாகக் கிடைக்கிற பதிலும் நடுநிலையாளர்களை, நல்ல மாற்றத்துக்குக் காத்திருப்பவர்களை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.

Monday, November 24, 2008

ரசிகர்கள் உண்ணாவிரதம்!


மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்!


இலங்கையில் தமிழர்கள் காயம்பட்டு துடிக்கும் இந்த தருணத்தில் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம். எனது இந்த அறிவிப்பு அவர்களது அமைதி முயற்சிக்குத் தூண்டுதலாக இருந்தால் மகிழ்ச்சி அடைவேன்', என சூப்பர் ஸ்டார் ரஜினி விடுத்த செய்தியின் தாக்கம் உலகம் முழுக்க எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.இப்போதே பல ரசிகர் மன்றத்தினர், ரஜினியின் பிறந்த நாளன்று இலங்கை மக்களின் துயர் துடைக்கும் விதத்திலும், அவர்களுக்கு மன ஆறுதல் தரும் விதத்திலும் என்னென்ன செய்யலாம் என ஆலோசித்த வருகிறார்கள்.முதல்கட்டமாக மதுரை மாவட்ட ரசிகர்கள் ரஜினியின் பிறந்த நாள் செய்தியை அர்த்தமுள்ளதாக்கும் விதத்தில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.இது குறித்து மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளான ரபீக், பாண்டியன், பால தம்புராஜ், சோலைராஜா ஆகியோர் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஈழத் தமிழர்கள் போரால் பாதிக்கப்பட்டிருப்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இந்த ஆண்டு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். அவரது வேண்டுகோளை நாங்கள் முழுவதுமாக ஏற்கிறோம். தலைவரின் இந்த வார்த்தைகளை அர்த்தமுள்ளதைக்கும் விதத்தில் ரசிகர்களான நாங்களும் நடந்து கொள்ள முடிவு செய்துள்ளோம்.எனவே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சூப்பர் ஸ்டார் பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி உண்ணா விரதம் இருக்க மதுரை மாவட்ட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். அத்துடன் போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்ற நிவாரண உதவி பொருட்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கையிலும் ஈடுபட மதுரை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளோம், என்றார்.

Saturday, November 22, 2008

ரஜினியைப் போன்ற தேசியவாதி எங்களுக்கு இல்லையே! - பால் தாக்கரே




ரஜினியைப் போன்ற தேசியவாதி எங்களுக்கு இல்லையே! - பால் தாக்கரே




மராட்டிய மாநிலத்தின் அரசியல் தலைவர் பால் தாக்கரே நேற்று எழுதிய தலையங்கம் இது. உடனே பால் தாக்கரே பாராட்டு நமக்கு எதற்கு என கமெண்ட் எழுத ஆரம்பித்துவிடாதீர்கள்.நல்ல விஷயம் எங்கே இருந்தாலும் வரவேற்பதும், நியாயமற்றதை யார் செய்தாலும் எதிர்ப்பதும் ரஜினியின் குணம்.இங்கு ரஜினியை ஒரு பேராளியாக சித்தரித்துள்ளார் பால் தாக்கரே. தமிழர்களுக்காக ரஜினி உரிமைக் குரல் கொடுப்பதைப் போல, மராட்டியர்களுக்கு யாரும் கொடுப்பதில்லை என்பது அவர் கருத்து.நம்மவர்களோ, ரஜினியை தமிழர்களுக்கு எதிராக இன்னும் எப்படியெல்லாம் காட்டலாம், கட்டுக் கதை எழுதலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழினத்துக்காக ரஜினியைப் போல அக்கறை காட்டுபவர் யாரும் இல்லை என்ற பால் தாக்கரேவின் கருத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.மற்றபடி அது மராட்டியமோ, தமிழகமோ... பிராந்தியவாதத்தை ரஜினி ஒருபோதும் ஏற்பவரில்லை.சாம்னாவில் வெளியாகியுள் பால் தாக்கரேவின் தலையங்கம்:இலங்கை தமிழர் பிரச்சினையை கண்டித்தும், அங்கு தமிழர்கள் படும் துயரங்களையும், வேதனையையும் உணர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாட போவதில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.இந்த முடிவை எடுத்ததற்காக ரஜினியை வாழ்த்துகிறோம். இதை பிராந்தியவாதம் என்று நாங்கள் கூற மாட்டோம்; தேசியவாதம் என்று தான் நாங்கள் அழைப்போம். இலங்கையில் தமிழர்கள் படும் துயரங்களுக்காக ரஜினிகாந்த் கவலைப்படுகிறார். இலங்கை தமிழர் பிரச்சினையை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் அனைவரும் ஒன்றாக உள்ளனர். இவர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து விட்டு பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தனர்.தேசத் துரோகிகளா?இதே போன்ற பிரச்சினையை நாங்கள் எழுப்பினால் தேசத்தை உடைக்க முயற்சி செய்வதாக எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். தமிழர் பிரச்சினைகளுக்காக செய்யும்போது யாரும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. மராட்டியர்களின் உரிமைகளுக்காக போராடினால் எங்களை தேசத் துரோகிகள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.ரஜினிகாந்த் காவிரி நீர் பிரச்சினைக்காக போராடுகிறார். நாங்கள் மராட்டியர்களுக்கு வேலை வழங்கக் கோரி போராடுகிறோம். தமிழர்களின் உரிமைகளிலும் மராட்டியர்களின் உரிமைகளிலும் வேறுபாடு உள்ளதா?ரஜினி போல யாரும் இல்லை!மராட்டிய மாநிலம் உருவாகுவதற்காக 105 பேர் தங்கள் உயிரை விட்டுள்ளனர். ஆனாலும் ரஜினிகாந்தை போல் யாரும் இதுவரை மராட்டியத்தில் உருவாகவில்லை.தமிழகத்தில் ரஜினிகாந்தின் பணிகள் முடிந்து விட்டன. இனி அவர் மராட்டியத்துக்கு வந்து மராட்டியர்களுக்காக போராட வேண்டும்.

Friday, November 21, 2008

எம்.என்.நம்பியாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் ரஜினி


எம்.என்.நம்பியாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் ரஜினி


சூப்பர்ஸ்டார் ரஜினியின் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய நடிகர்களில் ஒருவரான எம்என் நம்பியார் இன்று பிற்பகல் மரணடைந்தார்.ரஜினியின் பெரும்பாலான படங்களில் நம்பியாருக்கும் முக்கிய வேடம் அளிக்கப்பட்டிருந்தது. எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு அவர் அதிகம் சேர்ந்து நடித்தது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.மரணமடைந்த எம்.என்.நம்பியாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து, வணங்கினார் ரஜினி.பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:நம்பியார் ஒரு புண்ணிய ஆத்மா. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் வேண்டுகிறேன்.அவரது இழப்பு அவர்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, திரையுலகுக்கே பெரிய இழப்பு. அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.ரஜினி-நம்பியார் காம்பினேஷனில் வந்தவை பெரும்பாலும் சூப்பர் ஹிட் படங்கள்தான். கண்ணியமான வேடங்களையே அவருக்குத் அளித்து வந்தார் சூப்பர்ஸ்டார். குறிப்பாக எஜமான், பாபா படங்களில் நம்பியாரின் நடிப்பு ரஜினி ரசிகர்களைப் பெரிதும் கவர்வதாக இருந்தது.அவரது மரணம் தொடர்பான செய்தி (தடஸ்தமிழ்):சென்னை: பழம்பெரும் நடிகருமான எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நப்பு இருந்தது என்பதை நம்பியாரே ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:எனக்கு எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.அந்த விழாவில் தலைமை விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். கடைசியாக ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார்.நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி.தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.திகம்பரசாமியார் எனும் சூப்பர் ஹிட் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார் என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது.நம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.திரையில்தான் வில்லனாக நடித்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்தி மிக்க நேர்மையான மனிதராகவே வாழ்ந்தார் நம்பியார்.

Thursday, November 20, 2008

Kuselan Boxoffice

Kuselan smart enough in overseas Box Office!

Here is the exact box office report of Rajinikanth’s Kuselan in UK.Kuselan has collected 1, 06,394 Pounds (Rs.88.14 lakhs) from 17 screens in Great Britain’s UK box office alone. Remember the film has opened in UK BO at 13th position. Kuselan is the second big film that collected nearly a crore in the UK box office. Kamal’s Dasavatharam has collected Rs.1.07 cr in 19 theaters is in the top.Though Kuselan was declared as a flop by the trade pundits here, the overseas collection of the film is smart and the film’s owner Saimira is very happy about the performance. In US and South East Asian Countries like Malaysia and Singapore the film has collected in crores and the producers are prepared to release the data soon.In Kuselan Rajini just appeared for 30 plus minutes and some of his ardent fans got disappointed due to his short role. At the time of the film’s release, some unwanted political situation forced the film to exit from the halls at the earliest. Some exhibitors claimed heavy loss and demanded compensation while the film was running in most of the theaters.It can be recalled that the compensation drama has ended last week only and Pyramid Saimira declared that everything has settled smoothly.

Wednesday, November 19, 2008

ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் பிறந்த விதம்


ரஜினிக்கு பாட்டு எழுதும்போது மட்டும் யாரும் சொல்லாமலே தானாக வந்து விழுகின்றன வார்த்தைகள். அதுதான் அவருக்குள்ள வசீகரம், சிறப்பு என்கிறார் கவிஞர் வைரமுத்து.சென்னையில் லஷ்மன் ஸ்ருதியின் வித்தியாசமான இசை நிகழ்ச்சி ஒன்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அந்தப் பாடல் பிறந்த விதம் போன்ற சுவாரஸ்யமான பல நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.அவற்றில் சிலவற்றை எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா ஆகியோர் பாடி பரவசப்படுத்தினார்கள். ஒவ்வொரு பாடலையும் அவர்கள் பாடுவதற்கு முன்பாக, அந்த பாடல்களை எழுதிய சூழ்நிலையை கவிஞர் வைரமுத்து விவரிக்க, அதுவே ஒரு தனி அனுபவமாக அமைந்தது ரசிகர்களுக்கு.சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் பிறந்த விதம் பற்றி அவர் விளக்கியபோது, அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது.அவர் பேசியதிலிருந்து...ரஜினி அவர்கள் நடித்த முத்து படத்துக்கு பாடல் எழுதுவதற்காக ரஜினிகாந்த், நான், கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கேரளாவில் உள்ள கொச்சிக்கு சென்றிருந்தோம். அப்போது, ஏ.ஆர்.ரகுமான் ஒரு தனி அறைக்கு சென்றுவிட்டார். நான் பாடலுக்கு மெட்டு போடும் வரை என்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறி அறைக் கதவையும் அடைத்துக் கொண்டார்.ரஜினிகாந்தும், நானும் ஆன்மீகம், அரசியல் என்று எவ்வளவோ பேசினோம். அப்போது, மாவீரன் அலெக்சாண்டர் பற்றி ஒரு சம்பவத்தைச் சொன்னார் ரஜினி அவர்கள்.உலகில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் போரிட்டு வென்ற அலெக்சாண்டரே, தான் இறக்கும்போது தனது இரண்டு கைகளையும் வெளியே தெரியும்படி வைத்து, இவன் போகும்போது ஒன்றையும் கொண்டு போகவில்லை என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தனது உதவியாளரிடம் கூறினாராம்.இதை நண்பர் ரஜினி அவர்கள் சொன்னபோது, கேட்டு வைத்துக் கொண்டேன்.அதை வைத்தே, ‘முத்து’ படத்தில் வரும் ‘ஒருவன் ஒருவன் முதலாளி...’ பாடலை எழுதினேன். அந்த பாடலின் இடையே ‘மண்ணின் மீது மனிதனுக்காசை, மனிதன் மீது மண்ணுக்காசை..’ என்று எழுதியது இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் குறிப்பிடத்தான்.ரஜினிகாந்தின் சிறப்பே, யாரையும் அவர் நேரடியாக கட்டுப்படுத்துவதில்லை. நம்மையும் அறியாமல் அவர் சொல்வதைக் கேட்போம். அவரது வார்த்தக்கு அப்படி ஒரு வசீகரம் இருக்கிறது. எனக்கு இப்படித்தான் பாட்டு வேணும், இந்த மாதிரிதான் வரிகள் அமையணும் என்று அவர் யாருக்கும் கட்டளை போட்டதில்லை. அவருக்கு எழுதும்போது தானாகவே வந்து விழுகின்றன அத்தகைய வரிகள். அதுதான் அந்த உச்ச நட்சத்திரத்தின் சிறப்பு, என்றார் வைரமுத்து.

ஈழத் தமிழர் பிரச்சினை: வேண்டாம் பிறந்தநாள் கொண்டாட்டம் ! –ரஜினி


ரஜினியின் பட வெளியீட்டை விட பத்து மடங்கு உற்சாகத்துடன் ரசிகர்கள் கொண்டாடும் விசேஷம் தங்கள் தலைவர் ரஜினியின் பிறந்த நாள் விழா.
ஆண்டுதோறும் டிசம்பர் 12-ம் தேதி ரத்ததானம், கண்தானம், உணவு தானம், சமபந்தி போஜனம், தங்கத் தேர் இழுத்தல், பூச்சட்டி ஏந்துதல் என தங்களுக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் ரஜினி பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வது அவர்கள் வழக்கம்.
திருச்சி, கோவை மற்றும் சேலம் மாவட்டங்கள் ரஜினி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்றவை.
ஆனால் இம்முறை இந்தக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் மன்றத்தின் நிர்வாகியும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான சுதாகர் பத்திரிகைகளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:ரஜினிகாந்தின் பிறந்தநாள், அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி வருகிறது. இந்த ஆண்டு பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தார்கள்.
ஆனால் ஈழத் தமிழர்கள் துன்பப்படும் இந்த வேளையில், பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்க்கும்படி, ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
இதுபற்றிய முறையான அறிக்கையை அவரே நேரடியாக வழங்கவிருக்கிறார். ரசிகர்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், என சுதாகர் கூறியுள்ளார்.
அவர் சொல்லி முடித்த 24 மணி நேரத்துக்குள் ரஜினி தனது அறிக்கையை மீடியாவுக்கு வழங்கியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
இலங்கையில் நடைபெற்று வரும் போர் காரணமாக ஒவ்வொரு தமிழனின் இதயமும் காயப்பட்டுள்ள இந்த நிலையில் எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் எனறு ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கத் தூண்டுகோலாக எனது இந்த அறிவிப்பும் அமைந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன், என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் ரஜினி.
எளிய முறையில் பணிகளைச் செய்யுங்கள்!பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்ற ரஜினியின் முடிவு வெளியானதும், உலகம் முழுவதிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து மண்டபத்துக்குப் போன் செய்து பிறந்த நாள் விழாவுக்கு தாங்கள் செய்துள்ள ஏற்பாடுகளைத் தெரிவித்து வந்ததால், இப்போது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பதில் அன்னதானம், ரத்ததானம் போன்ற நற்பணிகளை ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ள விதத்தில் செய்ய அனுமதிக்கலாம் என மன்றப் பொறுப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று ரஜினி சார் கூறிவிட்டார். ஆனால் ஏழை மக்களுக்காக நடக்கும் நற்பணிகள் தொடரலாம். அதையும் கூட எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று ரஜினி கேட்டுக் கொண்டுள்ளார். இவை எல்லாமே ரஜினி சார் என்னிடம் சொன்னவை. அதை அப்படியே மீடியாவுக்குச் சொல்லிவிட்டேன், என்றார் சுதாகர்.

Friday, November 14, 2008

ரஜினியின் இன்றைய இமேஜ்... சில பார்வைகள்!






சில தினங்களுக்கு முன் சுப்பிரமணியன் எனும் ரசிகர் ஒரு இப்படி பின்னூட்டமிட்டிருந்தார் நமது தளத்தில்...“தலைவரை எதிர்த்த அசுரர்கள் ஒவ்வொருவரும் இப்போது மீண்டும் அவரைத் தேடி வந்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள்...” என்று அதில் குறிப்பிட்டிருந்தார் அந்த ரசிகர்.உண்மைதான்... ரஜினி எனும் நல்லவருக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்ட சில அசுர சக்திகளே இப்போது அவருக்கு வெண்சாமரம் வீசத் தொடங்கியிருக்கின்றன.ஆனால் இவற்றைப் பார்த்து அவரும் மயங்கிவிடவில்லை... அவரது ரசிகர்களும் அசந்துவிடவில்லை.ரஜினி மீதான காரணமற்ற விமர்சனம், தனிநபர் தாக்குதல் எவர் வாயிலிருந்து வெளிப்பட்டாலும் அதைச் சகித்துக் கொள்ளமாட்டோம். அதே நேரம் அவரது புகழ்பாடும் எந்த விஷயத்தையும் புறக்கணிக்கவும் மாட்டோம் என்ற அடிப்படையில் அந்த அசுர சக்திகளின் தடுமாற்றத்தையும் முன்பு எழுதினோம், இப்போது மனமாற்றத்தையும் பதிவு செய்கிறோம்.சத்யராஜ், ராமதாஸ் வரிசையில் இப்போது சீமானும் சேர்ந்திருக்கிறார்.முன்பு குசேலன் பிரச்சினையின் போது ரஜினியை ஆதரித்த நால்வருள் இவரும் ஒருவர். ஆனால் சொல்பவர் பேச்சைக் கேட்டு, என்ன நடந்தது என்று புரியாமலே ரஜினியை விமர்சித்தார்.இப்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ரஜினியின் பேச்சு அவரது மனசாட்சியை உலுக்கிவிட்டது போலிருக்கிறது.ஈழத் தமிழர் விவகாரத்தில் ரஜினியின் தெளிவான பார்வை இந்தியாவுக்கு இல்லாமல் போனது துரதிருஷ்டம்தான் என்று தனது அனைத்து பேட்டிகளிலும் கூறி வருகிறார்.ஈழ மக்களின் போராட்டத்துக்கு முன்னிலும் வலு கூடியிருக்கிறது. அதே போல தாய்த் தமிழகத்தில் அவர்கள் மீதான பார்வை மாற ரஜினி மற்றும் கமலின் பேச்சுக்கள் பெரிதும் உதவியிருக்கின்றன, என்கிறார் சீமான்.
பழ. நெடுமாறன்
ரஜினியின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டுக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்திருப்பது தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனிடமிருந்து. கலைத்துறையைச் சேர்ந்தவர்களை அவர் அத்தனை சுலபத்தில் பாராட்டுபவரில்லை.அவர் இப்படிக் கூறுகிறார்:“பொதுவாகவே எனக்கு சினிமாக்காரர்களின் போராட்டங்கள் மீது பெரிய மரியாதை கிடையாது. பிரச்சினைின் ஆழம் மறக்கடிக்கப்பட்டு, பொழுதுபோக்கு அம்சமே முன்னால் வந்து நிற்கும்.ஆனால் அன்றைய உண்ணாவிரதம் ஒரு நல்ல விதிவிலக்கு. எனக்குத் தெரிந்து ரஜினிகாந்தின் நிலைப்பாடுதான் சரியானது. பிரச்சினையை எத்தனை ஆழமாக அணுகுகிறார் அவர் என்பதற்கு இந்தப் பேச்சு சான்று. அவர் ஆன்மீக அடிப்படையில் பேசினாலும் அதில் அறிவியல் இருந்தது. ஈழ மக்களின் சார்பில் அவருக்கு பாராட்டுக்கள்.என் கோபமெல்லாம்... இந்த பரந்த சிந்தனை கலைஞருக்கு இல்லையே என்பதுதான். கடைசி வரை தன் இனத்தையே அடகு வைத்து அரசியல் லாபம் பார்க்கிறாரே கருணாநிதி என்பதுதான்... ரஜினி போன்ற ஒரு நல்ல கலைஞருக்கு தமிழின வரலாற்றில் நிச்சயம் இடமுண்டு; ஆனால் இந்தக் கலைஞரை (கருணாநிதி) வரலாறு மன்னிக்காது, எனக் கூறியுள்ளார்.
இந்தப் பக்குவம் அவருக்கு இயல்பாகவே வந்திருக்கிறது!
சமீபத்தில் நடிகர் சிவக்குமாரைச் சந்திக்க நேர்ந்தது. உண்ணாவிரதத்தில் ரஜினியின் பேச்சு, ரசிகர் சந்திப்பு, அரசியல் குறித்த அறிவிப்பு என அடுத்தடுத்த ரஜினியின் நகர்வுகள் தனக்கு எந்த ஆச்சர்யத்தையும் அளிக்கவில்லை என்றார் அவர்.“ரஜினி சொன்னது போல, அரசியலில் ஒரு அரிய வாய்ப்பினை மூப்பனார் தந்த போதும், அதை மறுத்தவர் ரஜினி. முன்னெப்போதும் பார்த்திராத ஒரு தீர்க்கதரிசி இப்போது ரஜினிக்குள் தெரிகிறார். இந்த மாதிரி மனிதர்கள் அபூர்வமானவர்கள். தனக்கென்று எந்த அதிகாரத்தையும் வேண்டாதவர்கள். அவரது பாபா படத்தின் அடிநாதமே அதுதான்.ஆனால் இந்த பக்குவப்பட்ட நிலைக்கு அவர் மெனக்கெட்டு தயார்படுத்திக் கொண்டார் என்று சொல்லமாட்டேன். இது இயல்பாகவே அவருக்கு அமைந்திருக்கிறது...” என்றார்.‘அதான் முன்பே சொன்னோமே சார்... அவர் சாதாரண மனிதரல்ல... வரம் வாங்கி வந்தவரென்று!’ என சொன்னபோது, நம் கண்களை ஊடுருவிப் பார்த்துவிட்டுச் சிரித்தார் சிவக்குமார்.

Wednesday, November 5, 2008

ரசிகர்களைச் சந்தித்த ரஜினி



ஆண்டவன் நினைத்தால் நாளையே கட்சி! - அதிர வைக்கும் ரஜினி


இதுதான் நம் அன்புத் தலைவர், தொண்டர்களாக மாறத் துடித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்குச் சொல்லும் புதிய கீதை!ஆம், இன்று தலைவர் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்டவாரியாக சந்தித்தார். காலை 7 மணியிலிருந்தே ராகவேந்திரா கல்யாண மண்டபம், பத்துக் கல்யாணங்களை ஒன்றாகச் செய்யும்போது ஏற்படும் அமர்க்களத்துடன் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.கடுமையான போலீஸ் பாதுகாப்பு, தளபதி சத்தி மற்றும் தலைமை மன்ற நிர்வாகிகளின் சோதனைகளுக்குப் பிறகே, ஒவ்வொரு ரசிகர் மன்ற நிர்வாகியும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.மாவட்டத்துக்கு 10 நிர்வாகிகள் வீதம் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அனைவரும் பிரதான மண்டபத்தில் அமர வைக்கப்பட்டனர். ஒவ்வொரு மாவட்ட வாரியாக தளபதி சத்தியநாராயணா, நிர்வாகிகளை அழைத்து தலைவருக்கு அறிமுகம் செய்து வைக்க, அவர்களுடன் ரஜினி உரையாடுவதாக ஏற்பாடு.சந்திப்பு நடைபெறும் மேடையில் ஒரே ஒரு நாற்காலி. அதன் பின்னணியில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் எழுதப்பட்டுள்ள வாக்கியம்தான் இந்த சந்திப்பின் ஹைலைட். தலைவர் ரஜினி சொல்ல வரும் ஒட்டுமொத்த செய்திக்கும் சேர்த்து சொல்லப்பட்டிருக்கும் ஒரு வாக்கியம் அந்த பேனரில் இடம் பெற்றுள்ளது.‘கடமையைச் செய்; பலனை எதிர் பார்!’ – இதுதான் அந்த வாக்கியம்.அருகில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மஹாவதார் பாபாஜியின் படம்.சும்மா அதிருதுல்ல!ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து வந்த ரசிகர்களும் கேள்விகேட்க அனுமதிக்கப்பட்டனர்.தங்கள் கேள்விகளை அவர்கள் பதில்களாக எழுதி சுதாகரிடம் தர, அவற்றுக்கு நிதானமாக அழுத்தம் திருத்தமாக தன் பதில்களைத் தந்தார் சூப்பர் ஸ்டார்.தன்னை விமர்சிக்கும் கேள்விக்கும் நிதானமாக சிரித்தபடி அவர் பதில் கூறிய விதம் தலைவரின் தலைமைப் பண்பை வெளிச்சம் போட்டுக் காட்டியது.அரசியல் பற்றிய கேள்விக்கு ரஜினியின் பதில் நச்சென்று இருந்தது. உண்மையில் இன்று நாட்டுக்குத் தேவை இப்படியொரு மாமனிதர்தான் என்ற எண்ணத்தை ஒவ்வொரு ரசிகர் மனதிலும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன தலைவரின் பதில்கள்.இனி ரஜினியிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:கேள்வி: இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?ரஜினி: நீங்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள். அதேப்போன்று நானும் உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன். இதுதான் நோக்கம்.என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 300, 400 பேர் என கும்பலாக வருவதால், என்னால் எதுவும் செய்ய முடிய வில்லை. ஒருமுறை சச்சிதானந்த சுவாமிகள் தன்னுடைய சிஷ்யர்களிடம் பேசும்போது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் அதற்கு பதில் அளிக்கிறேன் என்றார். அதுதான் இப்போது நடக்கிறது.கே: ரஜினி ரசிகர்களுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்குமா? ரஜினி: சமூகத்தில் உங்களுக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும்படி செய்வேன்.கே: எதிர்காலம் திட்டம் என்ன?ரஜினி: முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள். என்னுடைய எதிர்காலத்திட்டம் தற்போதைக்கு எந்திரன் படம்தான்.கே: மன்ற நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்யப்படுமா?ரஜினி: பணம், ஜனம் இரண்டையும் ஒன்று சேர்க்கக் கூடாது. சேர்ந்தால் அங்கு அரசியல் வந்துவிடும். என்னிடம் பணத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்களால் இயன்றதை நீங்களே செய்யுங்கள். நான் தனியாக உதவிகள் செய்துகொண்டே தான் இருக்கிறேன்.
'கிருஷ்ணகிரி தமிழன்' ரஜினி!
கேள்வி: எந்திரன் படம் எப்படி இருக்கும்?
பதில்: உலகின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்றாக, இந்தியாவின் தலைசிறந்த படமாக இருக்கும்.
கேள்வு: உங்கள் பூர்வீக மாவட்டம் கிருஷ்ணகிரியில் உங்கள் தாய் தந்தைக்கு நினைவிடம் அமைப்பீர்களா?
ரஜினி: இதைக் கேட்டதும் ஒரு நிமிடம் ரசிகர்களை புன்முபறுவலுடன் பார்த்த ரஜினி, இந்தக் கேள்வியைக் கேட்ட ரசிகர் யார் எனக் கேட்க, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கார்த்திக் என்ற ரசிகர் எழுந்து கைத் தூக்கினார். அவரைப் பாராட்டினார் ரஜினி) ரு நல்ல விஷயத்தைக் கூறினீர்கள். அது பற்றி யோசிப்பேன்.
கேள்வி: குசேலன் தோல்வி ஏன்? படத்துக்கு நீங்கள் ரூ.25 கோடி வாங்கியதாகக் கூறுகிறார்களே?
பதில்: அந்தப் பட பூஜையின்போதே அதில் என் பங்கு என்ன என்று கூறிவிட்டேன். இயக்குநர் வாசுதான் என் போர்ஷனை அதிகப்படுத்தார். தெலுங்கு உரிமை கொடுக்க வேண்டாம், நாமே ரிலீஸ் பண்ணலாம் என்றேன். கேட்கவில்லை, கொடுத்துவிட்டார்கள்.ரூ.60 கோடிக்கு விற்காதீர்கள் என்றேன். அதையும் மீறி விற்றார்கள். இதில் என் தப்பு என்ன? இந்தப் படத்துக்கு நான் ரூ.25 கோடி வாங்கியதாகக் கூறுவதும் தவறு. கே: முதலில் ராகவேந்திரரை வழிபட்டீர்கள். பிறகு அருணாச்சலேஸ்வரர் என்றீர்கள். பாபாஜி என்றீர்கள். அடிப்படையில் உங்களுக்கே தெளிவான பார்வையில்லையா?ரஜினி: (சிரிக்கிறார்... சிறிது நேரம் யோசித்தவர்) இந்துவிலிருந்து முஸ்லீம், முஸ்லீம் இருந்து கிறிஸ்துவம் என்று மாறினால்தான் தவறு. அது கூட தவறு என்று சொல்ல முடியாது. நமது பாடத்திட்டத்திலேயே கூட வரலாறு, புவியியல், கணிதம் என்று பல படிப்புகள் உள்ளன.அவை நமது ஞானத்தை விருத்தி செய்கிறது அது போன்று தான் தேடல் நிறைந்த உள்ளம் நமது ஆன்ம ஞானத்தை விருத்தி செய்கிறது. இதில் தவறும் ஒன்றும் கிடையாது. எனக்கு விருப்பமானவர்களைப் பின்பற்றுகிறார்கள்.என் ரசிகர்களைப் பற்றி மக்களிடம் கேளுங்கள்!கே: நீண்ட காலம் மன்றப் பணிகள் செய்து வரும் ரசிகர்களை பற்றி உங்கள் கருத்து?ரஜினி: ரஜினி ரசிகர்களை பற்றி நான் பேச வேண்டிய அவசியம் கிடையாது. நாட்டு மக்களுக்கே தெரியும். இதை மற்றவர்களிடம் கேளுங்கள்.கே: உங்களைக் குழப்பவாதி என்று சில பத்திரிக்கைகளில் எழுதும்போது அதை கேட்கவும், படிக்கவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்கு ஏன் நீங்கள் இடம் கொடுக்கிறீர்கள்.ரஜினி: பத்திரிக்கைக்காரர்களை வைத்துக் கொண்டே இந்த கேள்வியை கேட்டால் எப்படி. சில நேரங்களில் நான் செய்வது கூட அப்படித்தான் இருக்கிறது. எல்லாம் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வதுதான். இது செய்தால், இது நடக்கும் என யூகித்து செய்வதில்லை.நாம் நினைப்பது சரி எனும்போது பேசி விடுகிறேன். வேறு கோணத்தில் பார்க்கிறவனுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். அது தவிர்க்க முடியாது. குழப்பவாதி என்று சொல்லலாம். சுயநலத்தோடு எதையும் செய்ய மாட்டேன். எது சரி என்று படுகிறதோ அதைத்தான் செய்வேன்.சில செய்திகளை படிக்கும் போது சிரிப்பாக இருக்கும். சில சிந்திக்க வைக்க செய்யும். சமீபத்தில் நான் வெளியிட்ட அறிக்கையை பற்றிக்கூட குழப்பவாதி என்று கூறினார்கள். அன்று நான் அந்த முடிவு எடுக்காவிட்டால் நாட்டில் எத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து சில நேரத்தில் கெட்ட பெயர் எடுத்துள்ளேன். இப்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன்.ஒகேனக்கல் – வருத்தம் ஏன்?கே: ஒகேனக்கல் விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதாகவும், வருத்தம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது. உண்மையில் நடந்தது என்ன? உங்கள் வாயால் சொல்லுங்கள். ரஜினி: (சிரித்துக்கொண்டே) முன்னாலே முன்னாலே போகனும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பின்னாலே பின்னாலே போகனும் என்கிறீர்கள். விஷயம் நடந்தது முடிந்தது. விட்ருங்க. அதிலேயே இருந்தால் எப்படி... முதல்ல ஒரு விஷயம் தெரிஞஞ்சுக்கங்க... நான் ஒருபோதும் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை. அதுக்கான அவசியமும் எனக்கில்லை. வருத்தம்தான் தெரிவித்தேன்.
முதலில் ஒகேனக்கல் பிரச்சனை சினிமா சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால் கர்நாடகாவில் எந்த பிரச்சனையானாலும் தியேட்டரைத்தான் முதலில் அடிப்பார்கள். காரணம் பெங்களூர்ல தமிழ்ப் படங்கள்தான் நல்லா ஓடும். பெரும்பாலும் கன்னடக்காரர்கள் பார்ப்பதும் தமிழ்ப்படம்தான். அதுல அவங்களுக்கு பிடிக்கல. அது தமிழர்களோட திறமை. திறமை எங்கும் ஜெயிக்கும்.
ஆனா, அவங்க இதுக்காக தேவையில்லாம தியேட்டர்களை அடிக்கறதும் சினிமாவை நிறுத்தறதும் தப்பு. அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத்தான் அந்த கூட்டத்தில் நான் அமர்ந்தேன்.அங்கு பேசியவர்கள் எப்படி பேசினார்கள் என்று உங்களுக்கு தெரியும். அதில் எனக்கு சிறிது கோபம் ஏற்பட்டது. நானும் மனிதன்தானே... அப்போது உணர்ச்சி வசப்பட்டு உதைக்கனும் என்று கூறிவிட்டேன். என்ன இருந்தாலும் அது தவறுதானே. நான் அப்படிப் பேசியது நாகரீகமல்ல. தண்ணீர் கொடுக்க மறுப்பவர்களை, தியேட்டர்களை அடித்து நொறுக்குபவர்களை உதைக்க வேண்டும் என்று கூறி இருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். அப்போது குசேலன் ரிலீசாகும் சமயம் கர்நாடகா விநியோகஸ்தர்கள் என்னைச் சந்தித்தார்கள். எடியூரப்பா தியேட்டருக்கு பாதுகாப்பு தருவதாக கூறினார். ரசிர்கள் கத்தி, கபடாவோடு நாங்களும் தயார் என்றார்கள்.ஒரு பிரச்சனை ஆரம்பித்தால் உடனே முடிய வேண்டும். இழுத்தடிக்கக் கூடாது. அதனால் பொது நலத்திற்காக, மற்றவர்கள் நலனுக்காக நான் வருத்தம் தெரிவிச்சிக்கிட்டேன். சத்தியமாக மன்னிப்புக் கேட்கவில்லை.கடமையைச் செய் பலனை எதிர்பார்!இங்க பாருங்க... மீண்டும் மீண்டும் நான் சொல்றதெல்லாம் குடும்பத்தை கவனியுங்கள் என்ற முக்கியமான விஷயத்தைத்தான்.நான் என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என்று என் கடமைகளை சரியாக செய்து வருகிறேன்.நீங்களும் உங்கள் கடமையைச் செய்யுங்கள்.கடமையைச் செய். பலனை எதிர்பார் இதுதான் நமது தத்துவம். அரசியலைப் பொறுத்தவரை ஒருவர் வெற்றி பெறுகிறார்கள் என்றால், அது திறமையாலோ, புத்திசாலித் தனத்தாலோ, உழைப்பாலோ என்று கூறினால் அது முட்டாள் தனம்.சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் ஆகியவை தான் ஒருவரின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கிறது. சரியில்லாத நேரத்தில் நீங்கள் குட்டிகரணம் அடித்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது. 1996-ம் ஆண்டு இருந்த நிலைமை வேறு. அன்று நான் பதவியில் போய் அமர வேண்டியதுதான் பாக்கி. அப்படி ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால் யாரோ ஜெயித்து அதை நாம் அனுபவிப்பதா...நமக்கு ஒரு விஷயத்தில் திறமை இருக்க வேண்டும். அனுபவம் இருக்க வேண்டும். அதை நாம் செய்ய வேண்டும். தெரியாமல் ஒரு விஷயத்தை செய்யக் கூடாது.என் சிறு வயதில் பணக் கஷ்டத்தில் இருந்த போது கூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 வருடம் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த பிறகு தான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன்.பலவந்தமாக திருமணம் செய்தால் அந்த வாழ்க்கை நடக்குமா? ஈடுபாடு இருந்தால் தான் இனிமையாக இருக்கம். ஒரு வேளை ஆண்டவன் சொன்னால் நாளைக்கே நடக்கலாம். தொடர்ந்து நாட்டில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே வாருங்கள்.தற்போது நாடு சரியில்லை. தமிழ்நாடு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியா முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது. பார்க்கலாம் ஆண்டவன் இருக்கிறான், என்றார் ரஜினி.பின்னர் ரசிகர்களிடம் விடைபெற்றுக் கொண்ட ரஜினி, மதிய உணவு அருந்திவிட்டுச் செல்லுமாறு எல்லோரையும் கேட்டுக் கொண்டார்.ரஜினியின் இந்த சந்திப்பைக் கவரேஜ் செய்ய 200-க்கும் மேற்பட்ட புகைப்படக்காரர்கள், நிருபர்கள், தொலைக்காட்சி குழுவினர் ராகவேந்திரா மண்டபத்தில் குழுமியிருந்தனர்.

Thursday, October 30, 2008

ரஜினியின் தமிழ் உணர்வுக்கு உரைகல் தேவையில்லை!


மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு... போன்ற தலைவர்கள் களத்தில் நேரடியாக இறங்கி போராடி நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு பகிரங்கமாக ஆதரித்து களத்தில் இறங்காவிட்டாலும், மானசீகமாக ஆதரவளித்தவர்கள் ஏராளம். இவர்களிடமிருந்து மாறுபட்ட வேறுவழிகளில் தங்கள் சுதந்திர உணர்வைக் காட்டிய தலைவர்களும் உண்டு.அதனால் அவர்கள் தேச விரோதிகாளாகச் சித்தரிக்கப்பட்டார்களா... அல்லது கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை அவர்களுக்கு மட்டும் இல்லையென்று ஆகிவிட்டதா...-இந்தக் கேள்வியை வாசகர் ஒருவர் கமெண்டாக எழுதியிருந்தார் ஒரு இணையதளத்தில், ராமேஸ்வரம் போராட்டத்தில் பங்கேற்காத நடிகர்கள் குறித்த (குறிப்பாக ரஜினி, கமல்) பாரதிராஜாவின் பேட்டிக்கு.இந்தக் கருத்தில் உள்ள உண்மைகளை ஏதோ நமது வசதிக்காக மட்டும் நியாயப்படுத்தாமல், எல்லாருக்கும் பொதுவாக வைத்து அலசிப் பாருங்கள்.ராமேஸ்வரம் போராட்டத்தில் ரஜினியும் கமலும் இதர நடிகர்களும் பங்கேற்கவில்லை. இதனால் அவர்கள் தமிழ் உணர்வு அற்றவர்கள் என்று முடிவு செய்துவிட முடியுமா... எந்த ஒரு பிரச்சினை குறித்தும் இன்னார் இப்படித்தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என யாரும் யாரையும் வற்புறுத்த முடியாது. ராமேஸ்வரத்துக்குப் போய் போராட்டம் நடத்துவதில் தெரியும் உணர்வு, சென்னையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் மட்டும் இலலாமல் போய்விடுமா...இலங்கைத் தமிழர் பாதிக்கப்படுவதற்கான கண்டனங்களைப் பதிவு செய்யும் கலைஞர்களுக்கு ஆதரவாக ரஜினி ஒரு அறிக்கையாவது விட்டிருக்கலாமே என பாரதிராஜா கோபப்பட்டிருந்தார்.பாரதிராஜாவின் கோபத்திலுள்ள நியாயத்துக்கு இணையான நியாயம் ரஜினியின் அமைதியிலும் இருக்கலாமல்லவா...இதை பாரதிராஜா உணர்வுப்பூர்வமாக பார்க்கிறார். ஆனால் ரஜினி போன்றவர்கள் அப்படி உணர்ச்சிவசப்பட்டு சர்வதேச பிரச்சினைகளில் ஒரு நிலைப்பாட்டினை எடுத்துவிட முடியாது.ராமேஸ்வரம் பிரச்சினையில் பங்கு கொண்ட கலைஞர்கள் தமிழர்களுக்கு ஆதரவு எனும் பெயரில் எல்லை மீறிப் பேசினார்கள். அந்த மாதிரி கொந்தளிப்பான ஒரு கூட்டத்தில் யாரும் யாரையும் அடக்கிக் கொண்டிருக்க முடியாது. அப்படியொரு சூழலில் யார் யாரோ முறை தவறிப் பேசுபவற்றுக்கு ரஜினி போன்றவர்கள் அல்லவா விளக்கம் சொல்ல வேண்டிவரும்!இன்னொன்று, இலங்கைப் பிரச்சினைதான் என்றில்லை... திரையுலகினர் நடத்திய பல்வேறு போராட்டங்களில் ரஜினி எப்போதும் நடுநிலையாகவே நடந்து கொண்டுள்ளார். கடைசியாக நடந்த ஒகேனக்கல் உண்ணாவிரதப் பேராட்டத்தின் போது கூட உதைக்க வேண்டாமா? என்று அவர் கூறியது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பயன்படுத்திய ஒரு வார்த்தைதான்.ஆனால் அதற்கே அவரைக் கூண்டிலேற்றிவிட்டார்கள். ஆனால் ‘கன்னடக்காரன் மனைவியரையும்’ இதில் இழுத்து ஆபாசமாகப் பேசிய நபர்களுக்கு தமிழுணர்வாளர் என்று பட்டமளித்து கவுரவித்துவிட்டனர் நம்மவர்கள்.ரஜினி போன்றவர்களை வரவிடாமல் தடுப்பது இபடிப்பட்ட செயல்கள்தான். மற்றபடி அவருக்கும் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் அக்கறையுண்டு. தனது எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர் அதை பகிரங்கமாகச் சொல்லத் தயங்கியதில்லை.‘தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் வாழ்க்கை நிலை நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. கர்நாடகத் தமிழர்களாக இருந்தாலும் சரி, இலங்கையில் துன்பப்படுகிற தமிழர்களாக இருந்தாலும் சரி.. இன்னும் உலகில் எஙஅகெல்லாம் தமிழர்கள் பரவியிருக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக நடைபெறும் எந்த செயல்களும் கண்டிக்கத்தக்கவையே...”, இது முன்பு ஒருமுறை ரஜினி அளித்த பத்திரிகைப் பேட்டி.கொடுத்த வாக்கையும், கொடுத்த பொருளையும் எப்பவும் திரும்ப வாங்க மாட்டேன் (இது அவரோட சினிமா வசனம் இல்லை... 1996 தேர்தலின் போது அவர் பிரயோகித்த சொந்த வசனம்தான்...) என்பது ரஜினியின் கொள்கை. இலங்கைத் தமிழர் விஷயத்தில் தனது நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாக எப்போதோ காட்டிவிட்டார் ரஜினி.இப்போதும் அவசியமேற்பட்டால் இலங்கைத் தமிழர் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்தத் தயாராகவே உள்ளார். அதனால்தான் தன்னை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்ட நடிகர் சங்கம் மீண்டும் அழைத்தபோதும் மறுக்காமல் உண்ணாவிரதத்துக்கு வர ஒப்புக் கொண்டுள்ளார் ரஜினி.எனவே தேவையில்லாமல் அவரையும் அவரைச் சார்நத சமூகத்தையும் சீண்டிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, அடுத்த கட்டப் பணிகளைப் பாருங்கள்.

Wednesday, October 29, 2008

ஊருக்குத்தான் உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே!


ஊருக்குத்தான் உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே!இந்த வழக்குச் சொல்லை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். பல நேரங்களில் அனுபவப்பட்டுமிருப்பீர்கள்.அதற்கு இப்போதைய உதாரணம் சத்யராஜ்.‘இவரெல்லாம் ஒரு ஆளுன்னு நினைச்சு எதுக்காக எழுதறீங்க...’ என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. ஆனால் இன்றைய சபைகளில் யோக்கியனின் குரல் எடுபடுவதில்லை. நிஜத்திலும் பிரமாதமாக நடிப்பவர்தான் இன்றைக்கு புரட்சித் தமிழன்களாக... இன முரசுகளாக உலா வர முடியும்.இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து பாரதிராஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்காத நடிகர்களைப் பற்றியும்,. இன்று சென்னையில் முதல்வர் தலைமையில் நடக்கவிருக்கும் மனிதச் சங்கிலி அறப்போர் பற்றியும் நீண்ட நாள் கழித்து இப்போது திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் சத்யராஜ்: ]“...ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை. காரணம் எனது வீட்டில் ஒரு முக்கிய நிகழ்ச்சி இருந்தது. அதைவிட்டுவிட்டு போக முடியாத சூழல்..!இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் நாளை முதல்வர் தலைமையில் மனித சங்கிலி நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தை நான் வரவேற்கிறேன்.கலைஞரின் இந்த அறவழிப்போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே லாயக்கற்றவர்கள். இதை கட்சி சார்பாகவோ, யாருக்கோ ஜால்ரா அடிக்கவோ நான் பேசிவல்லை. தமிழன் என்ற உணர்வோடு பேசுகிறேன். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி, மொழி இனபாகுபாடின்றி அனைவரும் ஒட்டு மொத்த குரல் கொடுக்க வேண்டும்...”- தமிழுணர்வெல்லாம் சரிதான். இவர் சுற்றி வளைத்து எங்கே வருகிறார் என்று சாதாரண ரசிகனுக்கே புரியும்போது ரஜினி ரசிகர்களான நமக்குப் புரியாதா...ஆனால் எந்த அடிப்படையில், மனிதச் சங்கிலியில் கலந்து கொள்ளாதவர்கள் தமிழகத்திலிருக்கவே லாயக்கற்றவர்கள் என்று சொல்கிறார் சத்யராஜ்?ராமேஸ்வரம் போராட்டத்தின்போது இவருக்கு எப்படி இவரது வீட்டு விசேஷம் முக்கியமாக இருந்ததோ, அதேமாதிரியான விசேஷங்கள் மற்றவர்களுக்கும் இருக்காதா... அல்லது இவர் ஒருவருக்குத்தான் குடும்பமே இருக்கிறதா...?ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத நடிகர்கள் தமிழர்களே அல்ல என்றார் பாரதிராஜா. அப்படியெனில் அது இவருக்கும் பொருந்தும் அல்லவா!அடுத்து இவர் எத்தனைப் பெரிய பொய்யர் என்பதற்கு ஒரு உதாரணம் இந்தப் பேச்சு. இவர் வீட்டு விசேஷம் என்று சொன்னதெல்லாம் சும்மா... இவருக்கு அன்றைய தினம் பாங்காக்கில் படப்பிடிப்பு இருந்ததாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு இவரே தகவல் அனுப்பியிருக்கிறார்.தமிழ் சினிமாவில் எதையும் தீர்மானிக்கிற சக்தியாக இல்லாத இவருக்கே இவ்வளவு என்றால், ஒரு மொழியின் திரைத்துறையையே தீர்மானிக்கிற சக்தியாகத் திகழும் ரஜினிக்கு எத்தனை முக்கிய பணிகள் இருக்கும்... அவர் மட்டும் அவற்றையெல்லாம் கவனிக்காமல் கூப்பிட்டவுடன் ஓடி வந்துவிட வேண்டுமா...?இவரைப் போன்ற ஆசாமிகள் பேச்சுக்கெல்லாம் மீடியா தருகிற முக்கியத்துவம்தான் மைக் கிடைத்தவுடன் இவர்களை கண்டபடி உளற வைக்கிறது.ஆனால் ஒன்று...ரஜினி வேண்டுமானால் பெருந்தன்மையுடன் இந்த மாதிரி அனாசாரங்களுக்கு பதில் தராமல் இருக்கலாம். ஆனால் அவரது ரசிகர்கள் எல்லா நேரத்திலும் அப்படியே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. படையப்பாவின் ஆறாவது முகமான அவரது ரசிகர்கள் தங்கள் நிஜ முகத்தைக் காட்டத் துவங்கினால்... என்னம்மா கண்ணு... தாங்க மாட்டே, நொந்துடுவ!

Tuesday, October 28, 2008

எனக்கு குரு தலைவர்தான். இதை எங்கும் சொல்வேன்..


அஜீத்-அறிமுகம் தேவையில்லாத முன்னணி நடிகர். தலைவருக்குப் பிறகு மெகா ஓப்பனிங் உள்ள நடிகர் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பெயரெடுத்துள்ளவர். எப்போதும் சர்ச்சை நாயகனாகத் தெரிந்தவர்... இப்போது சாந்த நாயகனாக மாறியிருப்பவர். Rajinifans.com என்றதும் கையை ஒருகணம் இறுகப் பற்றியவர், ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க பாஸ் என்று கூறிவிட்டு, வந்திருந்தவர்களுடன் அவசர அவசரமாகப் போட்டோ செஷன் முடித்துவிட்டு வந்தார். நமக்காக அஜீத் ஒதுக்கியது 10 நிமிடங்கள். அதில் ஒன்பதரை நிமிடங்கள் அவர் பேசியது தலைவர் ரஜினியைப் பற்றி!ரஜினியைப் பற்றி பேசும்போது அவர் குறிப்பிடுவது இரண்டு வார்த்தைகளைத்தான்... தலைவர் அல்லது சார்...அவரது வாழ்க்கையின் திருப்புமுனை எப்படி நிகழ்ந்தது...? ரஜினி என்ற மந்திரம் அவருக்குள் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியது?இனி அஜீத் பேசுகிறார்...அடிப்படையில் நான் தலைவரின் ரசிகன். அவரைப் பார்த்து, அவரைப் போலவே வரவேண்டும் என்ற ஆசையோடு வந்தவன். நான் நடித்த படங்களில் என்னால் முடிந்த வரை, ஒரு ரஜினி ரசிகனாக அவர் புகழ் பாடியிருக்கிறேன். அடிப்படையில் உங்களைப் போன்றே மிகத் தீவிரமாக அவரை ரசித்து மகிழும் ரசிகன் நான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இடையில் நான் பேசியவை, அவை எந்த மாதிரி வடிவம் பெற்று மீடியாவில் வந்தன என்பதெல்லாம் எல்லோரையும்விட சாருக்கு நன்கு தெரியும்.ஆனால், முன்பெல்லாம் நானாக அவரிடம் இதுபற்றிப் பேசினாலும் கூட அவர் தவிர்த்துவிடுவார். ‘விடுங்க... நீங்க சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. கொஞ்சமா பேசுங்க... நிறைய செய்ங்க. அப்புறம், நீங்க பேசாவிட்டாலும் இவர்கள் அனைவரும் உங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டே இருப்பார்கள்’ என்றார். எத்தனை சத்தியமான, அனுபவப்பூர்வமான வார்த்தைகள் பாருங்கள்!அவர் எனக்கு தி ஹிமாலயன் மாஸ்டர் புத்தகம் கொடுத்தார். ஒரு குருவைப் போல அது எனக்கு வழிகாட்டும் என்றார். எனக்கு குரு தலைவர்தான். இதை எங்கும் சொல்வேன், எப்போதும் சொல்வேன். ரஜினி சாரின் ரசிகர்களுக்கு இதைச் சொல்லுங்கள், ப்ளீஸ்...பில்லாவில் நான் நடிக்கிறேன் என்று தெரிந்த பிறகு எத்தனை விதமாக அதைக் கெடுக்க நினைத்தார்கள் தெரியுமா... ஆனால் அப்போதெல்லாம், சாருடைய ஆதரவுதான் எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. அந்தப் படம் துவங்கியதிலிருந்து, ரிலீஸ் வரை அனைத்திலும் ரஜினி சாரின் நேரடிப் பார்வை இருந்தது. யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அது என்றுதான் சொல்வேன்.இதோ.. ஏகன் ரிலீஸ். மிகுந்த சந்தோஷம் என்று சொல்ல மாட்டேன். நிறைவாக இருக்கிறது. இந்தப் படம் எப்படி வந்திருக்கிறது எனக் கேட்டுத் தெரிந்து கொண்டார் தலைவர்.தலைவரிடம் நான் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம், எப்போதும் உண்மையாகவே இருக்க வேண்டும் என்பது. அவரைப் பாருங்கள்... யாரிடமாவது தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற ரீதியில் பழகியிருப்பாரா... பேசியிருப்பாரா...! அவரே அப்படியென்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு பாஸ்!!அவரது ரசிகன் என்று சொல்லிக் கொள்வது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.நான் அமைதியாகிவிட்டதாகக் கூறுகிறார்கள்... உண்மைதான். எதற்கு அவசரப்பட வேண்டும். கிடைப்பது நிச்சயம் எனக்குக் கிடைத்தே தீரும் என்ற தலைவரின் வார்த்தைகளை நம்புகிறேன். அந்த நம்பிக்கையை நான் பெறும் வரையில்தான் அமைதியற்ற மனநிலையில் இருந்தேன்..., என்ற அஜீத், ஒரு புன்முறுவலுடன் விடை கொடுத்தார்.

Saturday, October 25, 2008

சந்திரமுகி – கல்லா கட்டும் சன் டிவி!


சந்திரமுகி – கல்லா கட்டும் சன் டிவி!
(Saturday, 25th October 2008)
ரஜினியின் தயவில் இந்த ஆண்டும் சன் டிவிக்கு அமர்க்கள தீபாவளியாக விடிகிறது.சூப்பர் ஸ்டாரின் சாதனைப் படம் சந்திரமுகியை தீபாவளி சிறப்புத் திரைப்படமாக அக்டோபர் 27-ம் தேதி ஒளிபரப்புகிறது சன் டிவி.சந்திரமுகியின் சாதனை உலகமறிந்தது. ரஜினியின் படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம், அதிக திரையரங்குகளில் 100 நாட்கள் கொண்டாடிய படம், விநியோகஸ்தர்கள் ஷேர் என்ற வகையில அதிக லாபம் சந்பாதித்துக் கொடுத்து, அந்த சாதனையை இதுவரை எந்தப் படமும் தொட முடியாத உயரத்தில் உள்ள படம்.சந்திரமுகியை மிகப்பெரிய விலைக்கு சன் டிவி வாங்கியிருந்தது. இப்போது அதைவிட பல மடங்கு அதிக விளம்பரதாரர் வருவாயுடன் ஒளிபரப்பப் போகிறது.ரஜினியின் பாட்ஷா என்ற ஒரு படத்தின் மூலம் சன் சம்பாதித்த தொகை அந்தப் படத்தை வாங்கிய விலையை விட 20 மடங்கு அதிகம் என்கிறார்கள் சன்னில் பணியாற்றும் நமது நண்பர்கள்!அதிக விலைக் கொடுத்து வாங்கினார்கள், இப்பேது அந்த ரிஸ்க் எடுத்த்தற்கு பலனாக நல்ல லாபம் சம்பாதிக்கப் போகிறார்கள். இதில் உங்களுக்கென்ன வந்தது என சிலர் கேட்கக் கூடும். வியாபாரத்தில் சென்டிமெண்ட் பார்க்கக் கூடாதுதான்.ஆனால் சிவாஜி, குசேலனை தங்களுக்குத் தராத கோபத்தில் சன் நிகழ்த்திய கோயபல்ஸ் பிரச்சாரம் இருக்கிறதே... சகிக்க முடியாத, மனிதத்தன்மையற்ற செயல் அது. அது என்ன வகை வியாபார தர்மம்?தனக்கு வேண்டியவர் என்பதற்காக ஒரேயடியாகத் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், அவரே வேண்டாதவராகிவிட்டால், ஒரேயடியாக குழிதோண்டிப் புதைக்க முயல்வதும் சன் குழும நியாயங்கள்.ரஜினி படங்களை ஒளிபரப்புவதற்கான வர்த்தக உரிமை வேண்டுமானால் சன்னுக்கு இருக்கலாம். ஆனால் தார்மீக உரிமை கிடையவே கிடையாது!

Friday, July 18, 2008

USA Rajini fans preparing for Kuselan release




HUGE 25 FT to 14 Vinyl cut out of SuperStar has been made in India and being shipped to 5 metro locations in US by Rajini fans; First time ever a cutout will be put in US and that will be for our superstar. Big Garland and milk abishekam may be next? You may get a chance to see these huge cut-out in Bay Area, Chicago, New Jersey, Dallas when you visit theaters to watch Kuselan! Bay area Rajini fans will have a big party next week when the banner gets unvield in IMC 6. Display permit application has been submitted in few cities/county offices.




Wednesday, July 9, 2008

Rajini’s intro will be unforgettable’, says Vasu


FROM a special appearance to an extended cameo, to finally being promoted as the hero, Rajinikanth has come a full circle as far as his role in Kuselan is concerned. Affirming that the Superstar will have screen presence for an hour in the film, P Vasu said the movie will be remembered for portraying Rajini at his youthful best.
"Rajinikanth will make an entry only in the third reel in the movie," the director announced at the audio release. "But it will be mind blowing," he assured.
With Rajini playing a Superstar in Kuselan, three of the songs make a direct reference to the Superstar himself, and describe fan frenzy. If sources are to be believed, his entry in the movie will be one of a kind, riding a horse, wearing a Mexican hat, an eye mask and with a sword. It will be in tune with a song Cinema Cinema, sung by Shankar Mahadevan.
Earlier in Chandramukhi, P Vasu had made an innovative entry, with kites displaying Rajini's name flying in the sky, in the song Kokku Para Para. It remains to be seen what gimmicks will be used in this movie to prop up the Superstar's presence.
Meanwhile, Rajini is said to have left for Rishikesh, and is expected to return in time for the movie's release.

Monday, July 7, 2008

Kuselan live concert on July 19

In a bid to promote the songs of Kuselan, a live concert of the movie's songs has been planned by Big Music, the label that has purchased the movie's music rights.
On July 19, all singers of the movie's album will come together, to present the movie's music, headed by the music director of the movie GV Prakash Kumar. The movie has five songs, including one sung by Daler Mehndi. "All singers of the album but for Daler Mehndi have confirmed their participation for the musical event. We are finalizing the venue and it should be done in the next couple of days," explained Umesh Pai, Big Music. Besides the songs of Kuselan, it has been planned to perform four other chartbusters of the Superstar at the event.
The audio rights for the movie have been bought at a record-creating Rs 2.25 crore, and the music major has many interesting promotional activities up its sleeve. One of this will be the live concert to promote the songs of the album. While the event will be held in Chennai on July 19, it is expected to happen in Hyderabad on July 25.
The audio for the movie was launched yesterday at Le Royal Meridien. With the movie's shooting complete re-recording for the movie is on now. Kuselan and Kathanayakadu will hit the screens in July end.

Friday, July 4, 2008

Kuselan breaks first-day records!

In spite of fears from internet downloads and other pirated forms of music posing a threat, Kuselan audio CDs have been sold in huge numbers in just one day of its release. As per the latest sales statistics taken around the city, 2 lakh CDs have been sold. And the second day has also seen a surge in the sales of the album according to trade analysts.
Kuselan’s audio was launched on Monday, June 30, 2008 evening in Chennai. G V Prakash has scored the music, and the album has 5 songs. The movie is gearing up for a grand release on July 25, 2008.

Thursday, July 3, 2008

CM, Rajini, Kamal watch 'Ulliyin Osai'


Chief Minister M Karunanidhi, along with 150 special invitees including Rajinikanth and Kamal Haasan watched ‘Ulliyin Osai’ on Tuesday, a film based on a story the Chief Minister had written four decades ago.
Rajini, when asked about the movie, said, 'Story, screen play and dialogues are superb. It is a fantastic love story. Excellent.' Asked if there was any particular dialogue that he liked, he said that there were far too many.
Praising Karunanidhi, Kamal said, 'He had worked on the project despite all his duties as Chief Minister. I have a lot to learn from him.'This film proves that both Kalaignar's stories and art are timeless, said director Bharathirajaa.K S Ravikumar, fresh from the success of ‘Dasavatharam’, said there were so many twists and unexpected turns in the movie in the second half and that kept him very interested and absorbed. 'The songs are very good and so is the manner in which they have been filmed. I did not expect such a touching movie,' he said.The film is based on Karunanidhi's short story 'Saarapallam Samundi'. Produced by Thiruvottiyur SP Murugesan, the film has Keerthi Chawla, Suja, Vineeth and Sarath Babu in lead roles. Ilavenil makes his debut as director while Ilayaraja has handled the music.

Wednesday, July 2, 2008

Kuselan Audio Review - Simply stunning


It sure was a challenging opportunity for 22-year-old G. V. Prakash Kumar to compose music for a Rajinikanth film. The expectations and hype were sky-high and he has lived up to them and has not disappointed the millions of Rajinikanth fans across the globe.
The young wizard has lived up to all expectations and was showered appreciation by Rajinikanth himself and his die-hard fans as well.
A visibly impressed Rajini called Prakash the right mix of Rahman and Ilayaraja. The album has five tracks which are predominantly hip-hop and groovy singing peans of Rajinikanth. Reminding one of Rahman in all his compositions, Prakash stuns everyone with his quality orchestration. His choice of singers (Shankar Mahadevan, Shreya Ghoshal and Daler Mehndi) shows that he hold mastery over his music in spite of his young age.
A soft melody in Chaaral and Sollamma, nice peppy tunes for Cinema Cinema, Perinba Pechukara and Om Zarare sum up the album. But the varied instrumentation and the catchy interludes and rhythm makes all the difference. Prakash proved his skills in 'Veyyil' and ‘Kireedom’ before. He seems to have come more polished and skilled in ‘Kuselan’. Not succumbing to any pressure, Prakash has generated electrifying stuff in ‘Kuselan’ sure to delight all music-lovers.
Cinema Cinema ( Shankar Mahadevan)

It is a song glorifying 75 years of Tamil cinema. It is penned by Valee, who had been part of the evolution of Tamil cinema. A major portion of the number sings peans of Rajinikanth, the actor himself. Prakash's pacy tune coupled with good use of stringed instruments strikes the right chord with listeners. No doubt the song will make Rajini fans ecstatic. Shankar Mahadevan's energy is amazing. His open-throated voice impresses one and all.
Chaaral (Shreya Ghosal)
A soft melody with less instrumentation. The orchestration and Shreya's voice are the major highlights of the album. Shreya Ghosal's diction of difficult Tamil words is good. The fact of music not dominating the lyrics provides solace to the listeners. A lovable number for those who have a heart for soft melodies.
Om Zarare (Daler Mehdni, Sadhana Sargam, Chithra)
This song relishes and regales Rajini fans. The song is for the die-hard Rajnikanth fans sung by energetic Daler Mehandi in the company of Sadhana Sargam and Chitra. A groovy number with decent rhythmic beats, Daler's magnetic voice catches admiration from music-lovers. But what spoils the party is poor Tamil diction by Daler. Sadhana Sargam and Chitra are as usual impressive.
Prakash has proved that he has the mastery over peppy numbers. His shrewd interludes and catchy harmony deserve special mention.
Perinba (Kailash Kher, Prassana)

One more song heaping praises on Rajinikanth. Kailash's voice is tailor-made in the company of Prasanna. A catchy tune with peppy beats, the song sticks to our heart while listening the very first time itself.
Reminds one of Prakash's earlier compositions Veyyilodu Vilayadi in ‘Veyyil’. But takes the turn as it progresses to sound similar to the mass songs of Rajinikanth. The song which heaps laurels on Rajinikanth would be cherished by his fans.
Sollama (Hariharan, Sujatha)
A melodious song that sounds pleasant and sweet. The simple lyrics and soft instrumentation does the trick. The piano interlude by Prakash shows his maturity as a music composer. Hariharan's voice cool as a cucumber coupled with Sujatha's sweet rendition takes the song on a higher plane. This is a song that will find its place in audio charts for a long time.
All said and done, Prakash has tried his best to satisfy Rajini's fans and in the process has come out with something very different.
An awesome album sure to rock everyone.

Tuesday, July 1, 2008

Kuselan Audio Release








Kuselan Audio launch - Invitation design
(Monday, 30th June 2008)
Kuselan team is gearing up for the much awaited audio launch. And as i said already a stylish invitation has been prepared and sent to the participants.The invitation is much attractive in all aspects including desing, style, pictures used and techincs adopted in printing.We think this is the first time a stylish and costly invitation prepared for our movie. Thanks to those who are behind this.Herewith we present the exclusive pictures of the invitation desing for our blog readers.

Kuselan Audio Release