ஆயிரம் செய்திகளை நாம் தினமும் படித்தாலும், நம்மையும் அறியாமல், தலைவரின் எந்திரன் பற்றிய செய்திகள் ஏதும் நம் கண்ணில் தென்படாதா என்று தான் நம் மனம் அலைபாயும்..
அப்படி பட்ட நமக்கு 'சன்' வசம் படம் சென்ற பிறகு, செய்திகள் வெளிவருவது மிக அரிதான ஒன்றாகிவிட்டது... அவர்களாக பார்த்து ஏதேனும் செய்திகள் வெளிவிட்டால் தான் உண்டு....
இந்த வார வண்ணத்திரை (உம்ம்ம்ம்ம் !!!) நமக்கு தேவையான செய்திகளை மிக மிக அளவாக வெளியிட்டுள்ளது.... யானை பசிக்கு சோள பொறி தருவது போல... இருந்தாலும் இதாவது நமக்கு கிடைத்ததே என்று சந்தோஷ படுவோம். தேங்க்ஸ் டு வண்ணத்திரை.
அப்ரானிகளுக்கு ஒரு துணுக்கு செய்தி :
இந்த வண்ணத்திரை புத்தகம் ஒரு 'சன்' வெளியீடு..
No comments:
Post a Comment